Home இந்தியாகைதான மீனவர்களை விடுவிக்க கோரி போராட்டம்!

கைதான மீனவர்களை விடுவிக்க கோரி போராட்டம்!

by admin

இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுலை செய்யுமாறு வலியுறுத்தி, மண்டபம் மீனவர்கள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இராமநாதபுரம் – மண்டபம் வடக்கு கடல் பகுதியில் இருந்து 405 விசைப்படகுகளில் 1600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடந்த 21 ஆம் திகதி காலை மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அன்று நள்ளிரவு இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நெடுந்தீவு அருகே கடற்றொழிலில் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

மீன்பிடி தடைக்காலம் நீக்கப்பட்ட முதல் வாரத்தில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மீனவர்கள் கைது செய்யப்பட்டமை கவலையளிப்பதாக தமிழக மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, 300-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More