உண்மை மற்றும் நல்லிணக்கஆணைக்குழு குறித்த சட்டமூலம் ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என, பிரான்ஸ் 24 இணையத்திற்கு அளித்துள்ள செவ்வியில் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச விசாரணை என்ற தமிழ் மக்களின் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் பூர்த்தி செய்யுமா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள ஜனாதிபதி தென்னாபிரிக்க பாணியிலான உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு அனைத்து தரப்பினரும் இணக்கம் வெளியிட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜெனீவா மனித உரிமை பேரவை விதித்துள்ள நிபந்தனைகளில் ஒன்று இது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
“இந்த ஆணைக்குழுவை சில வருடங்களிற்கு முன்னரே நாங்கள் உருவாக்கிவிட்டோம்,நான் ஜனாதிபதியானதும் இது குறித்து நான் தென்னாபிரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளேன் ஆகஸ்ட் மாதம் இது குறித்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவேன்” என ரணில்விக்கிரமசிங்கதெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் மாதம் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்படும் என்பது எனது கருத்து என ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.