Home இலங்கைஅரச உத்தியோகஸ்தர்கள் சமூகத்திற்கு நன்மைகள் செய்ய வேண்டும்

அரச உத்தியோகஸ்தர்கள் சமூகத்திற்கு நன்மைகள் செய்ய வேண்டும்

by admin
அரச சேவையில் இணைந்துள்ள அரச உத்தியோகத்தர்கள்  சமூகத்திற்கு நன்மை செய்ய வேண்டும் என்ற மனப்பான்மையுடன் இருக்க வேண்டும் என யாழ் மாவட்ட செயலர்  ஆ .சிவபாலசுந்தரன்  தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் தாதியர் பயிற்சி கல்லூரியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குருதி  கொடையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

அரச சேவையில் இணைந்துள்ள அரச உத்தியோகத்தர்கள் சமூகத்திற்கு நன்மைகளை செய்ய வேண்டும். அது குருதிக்கொடை வழங்குவதிலும் காணப்பட வேண்டும்.

ஏற்கனவே நான் கடமையாற்றிய திணைக்களங்கள் மற்றும் காரியாலயங்களில் அந்தந்த நலன்புரி அமைப்புகளில் ஊடாக இரத்ததான முகாம்களை கட்டாயமாக செய்ய வேண்டும் என அறிவுறுத்தி அந்த நடவடிக்கைக்கு  அவர்களை உள்வாங்கும் நடவடிக்கையினை  மேற்கொண்டிருந்தேன்.
தற்பொழுது நான் மாவட்ட செயலராக பதவி ஏற்ற பின் சகல பிரதேச செயலக பிரிவுகளுக்கும் அந்தந்த பிரிவுகளில் இரத்ததான முகாம்களை நடாத்தி இரத்ததான முகாம்களை செயற்படுத்த வேண்டும் என்று கோரி இருக்கின்றேன்.

அண்மையிலும் சில பிரதேச செயலகங்களில் இரத்ததான முகாம்கள் இடம் பெற்றிருந்தமை நீங்கள் அறிந்த விடயம்

இதற்கு அரசாங்க உத்தியோகத்தர்கள் என்ற வகையில் எங்களுடைய அலுவலகங்கள் தொடர்ச்சியாக தங்களுடைய பங்களிப்பை வழங்குவார்கள் என நம்புகிறேன் என தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More