இணைய விளம்பரத்தை நம்பி யாழ்ப்பாண இளைஞன் ஒரு இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தினை இழந்துள்ளார்.
இலங்கையில் செயற்படும் பொருட்களை விற்பனை செய்வதற்கான விளம்பர இணையத்தளம் ஒன்றில் மோட்டார் சைக்கிள் ஒன்றின் விற்பனை விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்தது.
அதில் அந்த மோட்டார் சைக்கிள் ஒரு இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதனை அடுத்து அதில் குறிப்பிடப்பட்டு இருந்த தொடர்பு இலக்கத்துடன் இளைஞன் தொடர்பு கொண்ட போது , மோட்டார் சைக்கிளுக்கு உரிய முழு தொகையையும் வங்கி ஊடாக செலுத்தினால் , மோட்டார் சைக்கிளை யாழ்ப்பாணம் கொண்டு வந்து கையளிக்கிறோம் என நம்பிக்கை தரும் விதமாக கதைத்துள்ளார்.
அதனை நம்பி இளைஞன் ஒரு இலட்சத்து 25 ஆயிரம் ரூபாயை வங்கியில் செலுத்தியுள்ளார். அதன் பின்னர் மோட்டார் சைக்கிள் உரிமையாளரின் தொலைபேசி இலக்கம் செயல் இழந்துள்ளது.
இந்த நிலையில் , விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டு இருந்த கொழும்பு விலாசத்தை தேடி சென்ற போது , விலாசம் பொய்யானது என தெரிய வந்துள்ளது.
அதனை அடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த இளைஞன் மானிப்பாய் காவல் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளார்.