399
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இம்முறையாவது எமது பிரச்சினைக்கு நீதியை வழங்கவேண்டும் என்று காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை விடுத்தனர்.
யாழ்ப்பாண மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் நல்லை ஆதீன முன்றலில் இன்றைய தினம் சனிக்கிழமை போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். அதன் போதே மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்தனர். குறித்த போராட்டத்தின்போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் புகைப்படங்களையும் போராட்டகாரர்கள் ஏந்தியிருந்தனர்.
Spread the love