விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம், மரபணு பரிசோதனை தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் இறுதி யுத்த காலத்தின் சில வாரம் பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தேன் என்றார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஊடக சந்திப்பு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது ஊடகவியலாளரொருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில்,
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரபணு பரிசோதனை தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது. நான் இறுதி யுத்த காலத்தில் இரண்டு வாரங்களுக்கு பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தேன்.
எனக்கு அது பற்றி எதுவும் தெரியாது. எனக்கு அதை பற்றி யாரும் எதுவும் சொல்லவில்லை. பிரபாகரன் கொல்லப்பட்டாரா என்பது எனக்கு தெரியாது. அது மேல்மட்டத்தை சேர்ந்தவர்களுக்கே தெரியும். அவர்களே அதை கட்டுப்படுத்தினர் – என்றார்.