456
ஒன்றரை லீட்டர் கசிப்பு வைத்திருந்தவருக்கு 15 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது மல்லாகம் நீதவான் நீதிமன்று. மானிப்பாய் பகுதியில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை ஒன்றரை லீட்டர் கசிப்புடன் , 28 வயதான இளைஞன் ஒருவர் மானிப்பாய் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட இளைஞன் விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் வியாழக்கிழமை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். அதன் போது குற்றத்தை இளைஞன் ஒப்புக்கொண்டதை அடுத்து , மன்று இளைஞனுக்கு 15 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது.
Spread the love