காலனித்துவ காலத்தில் இலங்கையில் இருந்து கொண்டு செல்லப்பட்டு, நெதர்லாந்தில் உள்ள அருங்காட்சியகங்களில் இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக வைக்கப்பட்டிருந்த கண்டி இராச்சியத்தை சேர்ந்த ஆறு கலைப்பொருட்கள் இலங்கைக்கு மீள ஒப்படைக்கப்படவுள்ளன.
கலைப்பொருட்களை இலங்கையிடம் ஒப்படைக்கும் தீர்மானத்தை நெதர்லாந்து அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
கண்டி பீரங்கி என அழைக்கப்படும் அலங்கரிக்கப்பட்ட துப்பாக்கி, தங்கம் மற்றும் வெள்ளியிலான வாள்கள், கத்தி மற்றும் இரண்டு துப்பாக்கிகள் என்பன அந்த கலைப்பொருட்களில் அடங்கும்.
இது தொடர்பான வர்த்தமானியை நெதர்லாந்து அரசாங்கம் வெளியிட்டுள்ளதாக தேசிய அருங்காட்சியகங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சனோஜா கஸ்தூரியாராச்சி குறிப்பிட்டார்.