565
தனக்கு தர வேண்டிய பணத்தினை தராத முதியவரை நான்கு ஆண்களுடன் இணைந்து பெண்ணொருவர் கடத்தி சென்று பணத்தினை பறித்துள்ளார். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் கோப்பாய் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட முதியவர் செய்ய முறைப்பாட்டின் அடிப்படையில் , ஆள் கடத்தல் , வலுக்கட்டாயமாக பணம் பறித்தமை , தாக்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ் பெண்ணையும் அவருடன் இணைந்த மேலும் நான்கு ஆண்களையும், கைது செய்வதற்காக காவல்துறையினர் தேடி வருகின்றனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் , பெண்ணொருவருக்கு காணி ஒன்றினை விற்பனை செய்வதற்கான முற்பணமாக 15 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்றுள்ளார். காணியை பெண்ணுக்கு விற்காத நிலையில் , கொடுத்த பணத்தினை , பெண் திருப்பி கேட்டுள்ளார் முதியவர் பணத்தினை கொடுக்காது காலத்தை இழுத்தடித்துள்ளார்.
இந்நிலையில், பணம் கொடுத்த பெண் வாகனம் ஒன்றில் நான்கு ஆண்களுடன் முதியவரின் வீட்டுக்கு அருகில் சென்று முதியவரை வாகனத்தில் கடத்தி சென்று , தாக்கி , அவரிடமிருந்து 15 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்ட பின்னர் முதியவரை விடுவித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து முதியவர் தன்னை கடத்தி பணம் பறித்தவர்கள் தொடர்பில் கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
Spread the love