அமைச்சுபதவிகளை கோரும் பொதுஜனபெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களை திருப்திப்படுத்துவதற்காக அரசாங்கம் உயர் பதவிகுழுவொன்றை உருவாக்க முன்வந்ததாகவும் எனினும் பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை நிராகரித்துவிட்டனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
உயர் பதவி குழு என்ற ஒன்றை உருவாக்கி அதற்கு பொதுஜனபெரமுனவின் உறுப்பினர்களை நியமிப்பதுடன் அவர்களிற்கு ஊதியம் வாகனங்கள் போன்றவற்றை வழங்க அரசாங்கம் முன்வந்துள்ளது எனினும் பொதுஜனபெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு அமைச்சு பதவிகளே வேண்டும் என பிடிவாதமாக உள்ளனர்.
எனினும் உத்தேச உயர்பதவி குழு குறித்த கூட்டமொன்றிற்காக அமைச்சு பதவிகளை கோரும் பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு அழைப்பு விடுத்தபோதிலும் அவர்கள் சமூகமளிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஆனால் அமைச்சரவையை விஸ்தரிக்க ஜனாதிபதி தயாரில்லை என தெரியவருகின்றது .
இதேவேளை முக்கிய வாக்களிப்பொன்றின் போது அரசாங்கத்தை கவிழ்க்க ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன..