கனேடாவின் நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி, (Gary Anandasangaree) தனக்கு இலங்கை அரசாங்கம் விசா வழங்க மறுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில், பதிவொன்றை இட்டுள்ள கரி ஆனந்தசங்கரி, தான் செய்யும் பணியின் காரணமாக விசா மறுக்கப்பட்டதாகத் கூறியுள்ளார்.
“சுதந்திரமான பேச்சு, அரசாங்கத்துக்கு பொருத்தமாக இருக்கும்போது அது அனுமதிக்கப்படுகிறது. கொடும்பாவிகளை எரிப்பதால், தொடர்ச்சியான இலங்கை அரசாங்கத்தின் தோல்விகளை சரி செய்ய முடியாது.
வருந்தத்தக்க வகையில், இலங்கை அரசாங்கம் எனது விசாவை மறுத்துவிட்டது. இது நாம் செய்யும் பணிக்கான பழிவாங்கல். நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம், ” என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.