கடந்த ஜூலை 10ஆம் திகதி முதல் காணாமல் போன டென்மார்க் பெண்ணின் சடலம் மாவனெல்லை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட அலகல்ல பாறையின் அடிவாரத்தில் இருந்து இன்று (14) கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மலையேறப் போவதாக தெரிவித்து அவா் தங்கியிருந்த விடுதியிலிருந்து வெளியேறிய 32 வயதுடைய குறித்தபெண், மீண்டும் திரும்பாமையை அடுத்து, விடுதியின் உரிமையாளர் கடுகண்ணாவை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தாா்.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே, பாறைக்கு அடியில் இருந்து அவா் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கடுகண்ணாவை காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா்.