890
இலங்கையின் மலையகத்த்தில் லிந்துலை – பெரியராணிவத்தை தோட்டக் குடியிருப்பில் பரவிய தீயினால் 10 வீடுகள் சேதமடைந்துள்ளன.
லிந்துலை காவற்துறைப் பிரிவிற்குட்பட்ட பம்பரகலை பெரியராணிவத்தை தோட்டத்தில் 24 வீடுகளை கொண்ட தொடர் குடியிருப்பிலேயே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
நேற்றிரவு(25.07.23) பரவிய தீ பொதுமக்கள் மற்றும் பொலிஸாரால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
தீ ஏற்பட்டமைக்கு மின்கசிவே காரணமென காவற்துறைனர் தெரிவித்தனர்.
Spread the love