Home இலங்கைலிந்துலை – பெரியராணிவத்தை தோட்டக் குடியிருப்பில் பரவிய தீயினால் 10 வீடுகள் சேதம்!

லிந்துலை – பெரியராணிவத்தை தோட்டக் குடியிருப்பில் பரவிய தீயினால் 10 வீடுகள் சேதம்!

by admin

இலங்கையின் மலையகத்த்தில் லிந்துலை – பெரியராணிவத்தை தோட்டக் குடியிருப்பில் பரவிய தீயினால் 10 வீடுகள் சேதமடைந்துள்ளன.

லிந்துலை காவற்துறைப் பிரிவிற்குட்பட்ட பம்பரகலை பெரியராணிவத்தை தோட்டத்தில் 24 வீடுகளை கொண்ட தொடர் குடியிருப்பிலேயே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

நேற்றிரவு(25.07.23) பரவிய தீ பொதுமக்கள் மற்றும் பொலிஸாரால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தீ ஏற்பட்டமைக்கு மின்கசிவே காரணமென காவற்துறைனர் தெரிவித்தனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More