446
கோப்பாய் ஆசிரியர்கள் கலாசாலையில் நூற்றாண்டு விழா கால புதன் ஒன்றுகூடலில் இன்றைய தினம் புதன்கிழமை புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு இடம்பெற்றது. கலாசாலை அதிபர் ச. லலீசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், யாழ் போதனா வைத்தியசாலை புற்றுநோய் சத்திர சிகிச்சை நிபுணர்களான டாக்டர் க. ஸ்ரீதரன், டாக்டர் தனுஜா மகேந்திரன் ஆகியோர் கருத்துரைகளை வழங்கினர்.
ஆசிரிய மாணவர் சார்பில் கருத்துரையை உடற்கல்வி நெறி ஆசிரிய மாணவி பூரணி நிஷாந்தன் ஆற்றினார். உடற்கல்வி நெறி ஆசிரிய மாணவர் சி. தினேஷ்குமார் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
Spread the love