334
யாழ்ப்பாணம் அச்சுவேலி செல்வநாயகபுரம் வீதியில் உள்ள வளர்மதி சனசமூக சமூக நிலைய வளாகத்தில் உள்ள பூச்செடிகள், பயன் பயன் தரு மரங்களுக்கு இனம் தெரியாத நபர்கள் மண்ணெண்ணெய் ஊற்றும் ஈன செயல் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியது.
முகங்களை மறைத்துக் கொண்டு பரல் ஒன்றில் மண்ணெண்ணெய் எடுத்து இவர்கள் இந்த கைங்கரியத்தில் ஈடுபட்டனர். கேமராவில் பதிவாகிய இரண்டு நபர்களும் பிரதேச மக்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அச்சுவேலி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது
இந்த இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்வதற்குரிய விசாரணைகளை காவற்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.-
Spread the love