Home இலங்கைதென்மராட்சியில் மூதாட்டியின் சடலம் மீட்பு கொலை என சந்தேகம்!

தென்மராட்சியில் மூதாட்டியின் சடலம் மீட்பு கொலை என சந்தேகம்!

by admin

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் மூதாட்டி ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மட்டுவில் வடக்கை சேர்ந்த 82 வயதுடைய தம்பையா சரோஜினி எனும் மூதாட்டியே உயிரிழந்துள்ளார்.

தனது வீட்டில் தனிமையில் வசித்து வந்த நிலையில் மூதாட்டி உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி காவற்துறையினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து , காவற்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

மூதாட்டி சடலமாக மீட்கப்பட்ட வீட்டில் பொருட்கள் சிதறி கிடைப்பதனாலும் , சந்தேகத்திற்கு இடமான முறையில் சடலமாக காணப்பட்டமையால் கொலையாக இருக்கலாம் என காவற்துறையினர் சந்தேகிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் காவற்துறையினர் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More