385
யாழ்ப்பாணம் கல்வியக்காட்டு பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றினுள் நேற்றைய தினம் புதன்கிழமை வன்முறை கும்பல் ஒன்று புகுந்து தாக்குதல் நடத்தியதில் உரிமையாளர் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளளார்.
மூவரடங்கிய வன்முறை கும்பல் ஒன்று இரவு கடைக்குள் புகுந்து கண்ணாடி அலுமாரி , சோடா போத்தல்கள் என்பவற்றை அடித்து நொறுக்கி உரிமையாளர் மீது தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளது.
உரிமையாளருக்கும், அவரது சகோதரருக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கோப்பாய் காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.
Spread the love