420
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மன்னார் மாவட்டத்தை சேர்ந்த , யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ பீட இரண்டாம் வருட மாணவியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பல்கலைக்கழகத்திற்கு அருகில் வீடொன்றில் சக மாணவிகளுடன் வாடகைக்கு தங்கியிருந்த நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை விரிவுரைக்கு செல்லாது அறையில் தனித்து இருந்த மாணவி , சக மாணவிகள் அறைக்கு வந்த வேளை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சடலத்தை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love