416
யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் ஒரு தொகை போதை மாத்திரைகளுடன் புத்தளம் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய நபர் ஒருவர் இன்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.யாழ் மாவட்ட காவல்துறைப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ,பண்ணைப் பாலத்தில் வைத்து குறித்த நபரை கைது செய்து சோதனையிட்ட போது , அவரது உடமையில் இருந்து ,500 போதை மாத்திரைகளை காவல்துறையினர் மீட்டுள்ளனர். குறித்த நபரை யாழ்ப்பாண காவல் நிலையத்தில் தடுத்து வைத்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். v
Spread the love