331
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை அதிகளவில் நுகர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குருநாகல் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞனே நேற்றைய தினம் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் , யாழ்ப்பாணத்தில் தங்கி நின்றி மின் சாதன பொருட்களை விற்பனை செய்து வந்தவர் எனவும் , நேற்றைய தினம் கல்வியங்காட்டு பகுதியில் மயங்கி விழுந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞனின் உயிரிழப்பு , இளைஞன் அதிகளவில் ஹெரோயின் போதைப்பொருளை நுகர்ந்தமையே காரணம் எனவும் , மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் , திடீர் மரண விசாரணை அதிகாரி ந. பிரேமகுமார் தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் காவல்துறைியனா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love