447
இலங்கை விமானப்படையின் பயிற்சி விமானம் சீனக்குடா விமானப்படை தளத்தில் விபத்துக்குள்ளானதில் விமானத்தில் பயணித்த இரண்டு அதிகாரிகள் உயிாிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
சீனக்குடா விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 01 விமான பயிற்சி படைப்பிரிவிற்குரிய PT -6 ரக விமானமே இன்று முற்பகல் சீனக்குடா விமானப்படை தள பிரதேசத்தில் விபத்துக்குள்ளானதாக விமானப்படை அறிவித்துள்ளது. விபத்து குறித்து விசாரணை நடத்த விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஸவினால் விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் விமானப்படை அறிவித்துள்ளது.
Spread the love