380
யாழ்ப்பாண பல்கலைக்கழக தமிழ் துறையால் நடத்தப்படும் சர்வதேச தமிழியல் மாநாடு, ” சமூக கட்டுமானத்தில் சங்கமருவிய கால அற இலக்கியங்கள் ” எனும் தொனிப்பொருளில் இரண்டு நாட்கள் நடைபெற்றன. யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் கடந்த திங்கட்கிழமை காலை தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் கி. விசாரூபன் தலைமையில் ஆரம்பமான மாநாடு மறுநாள் செவ்வாய்க்கிழமையும் நடைபெற்றது.
இந்த தமிழியல் மாநாட்டில் , சிறப்புரைகள் , ஆய்வுக்கட்டுரை தொகுதி வெளியீடுகள் , புலமையாளர் கௌரவிப்பு , ஆய்வரங்க அமர்வுகள் மற்றும் கலை நிகழ்வுகள் என பல்வேறு பட்ட நிகழ்வுகள் இடம்பெற்றன.
Spread the love