380
இளைஞனின் பாலியல் தொல்லைக்கு உள்ளாகிய 12 வயது சிறுமி தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் 12 வயது சிறுமி ஒருவர் தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் வீட்டாரால் காப்பாற்றப்பட்டு , சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு , சிறுமி உடல்நலம் தேறிய பின்னர் , சிறுமிக்கு உளவள சிகிச்சை அளித்த போது , தனக்கு 21 வயதுடைய இளைஞன் ஒருவர் தொலைபேசி குறுந்தகவல்கள் ஊடாக ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்புவதாகவு ம் , தவறான தொடுகைகள் மூலம் பாலியல் தொந்தரவு தந்ததலும் , தான் கடும் விரக்தியடைந்ததால் உயிர் மாய்க்க முயன்றதாக தெரிவித்துள்ளார். அதனை அடுத்து வைத்தியசாலை ஊடாக ஊர்காவற்துறை காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்துகாவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
Spread the love