Home இலங்கைபாலியல் தொல்லைக்கு உள்ளான 12 வயது சிறுமி உயிர்மாய்க்க முயற்சி

பாலியல் தொல்லைக்கு உள்ளான 12 வயது சிறுமி உயிர்மாய்க்க முயற்சி

by admin
இளைஞனின் பாலியல் தொல்லைக்கு உள்ளாகிய 12 வயது சிறுமி தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளார்.  கடந்த சில தினங்களுக்கு முன்னர் 12 வயது சிறுமி ஒருவர் தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் வீட்டாரால் காப்பாற்றப்பட்டு , சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு , சிறுமி உடல்நலம் தேறிய பின்னர் , சிறுமிக்கு உளவள சிகிச்சை அளித்த போது , தனக்கு 21 வயதுடைய இளைஞன் ஒருவர் தொலைபேசி குறுந்தகவல்கள் ஊடாக ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்புவதாகவும் , தவறான தொடுகைகள் மூலம் பாலியல் தொந்தரவு தந்ததலும் , தான் கடும் விரக்தியடைந்ததால் உயிர் மாய்க்க முயன்றதாக தெரிவித்துள்ளார்.   அதனை அடுத்து வைத்தியசாலை ஊடாக ஊர்காவற்துறை   காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்துகாவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More