இந்திய நாடாளுமன்றத்தில், மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது 3 நாட்களாக நடந்த விவாதத்துக்கு பதில் அளித்து பிரதமர் மோடி பேசும்போது, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியான தி.மு.க.வை கடுமையாக விமர்சித்துள்ளார்.
கடந்த 2 நாட்களுக்குமுன்பு காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சியான தி.மு.க.வின் அமைச்சர் ஒருவர், இந்தியா என்பது வடஇந்தியா என்று கூறுகிறார். தமிழ்நாடு இந்தியாவில் இல்லை என்று கூறுவதா?. தமிழ்நாடு இந்தியாவின் ஒரு பகுதி என வலியுறுத்தி உள்ளார்.
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்றுடன் (10.08.23) முடிவடைகிறது ராஜாஜி, காமராஜர், எம்.ஜி.ஆர், அப்துல்கலாம் பிறந்த மண்ணை இந்தியாவில் இருந்து பிரிக்க பார்க்கிறார்கள். இதற்கு எதிர்க்கட்சியினர் என்ன பதில் சொல்ல போகிறார்கள்?.
கச்சதீவை கொடுத்தது யார்? தமிழகத்தை ஆளும் தி.மு.க. அரசு கச்சதீவை மீட்க வேண்டும் என்று தனக்கு தொடர்ந்து கடிதம் எழுதிக்கொண்டு இருக்கிறது. கச்சதீவு தமிழ்நாட்டுக்கும், இலங்கைக்கும் இடையேவுள்ள தீவு. சிலர் அதை மற்றொரு நாட்டுக்கு (இலங்கைக்கு) கொடுத்துவிட்டனர்.
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. அது பாரதத்தாயின் ஒரு பகுதி இல்லையா?. 1962-ம் ஆண்டுக்கு பின்னர் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெற முடியவில்லை என்றும் மோடி தெரிவித்தார்.
இதேவேளை எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்ட இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.