Home உலகம்ஹவாய்   காட்டுத் தீயில் சிக்கி   55 போ் பலி

ஹவாய்   காட்டுத் தீயில் சிக்கி   55 போ் பலி

by admin

 

அமெரிக்காவின் தீவு மாகாணமான ஹவாயில் உள்ள  2-வது பெரிய நகரமாக மவுய் தீவில்    கடந்த 2 நாட்களுக்கு முன்பு   ஏற்பட்ட  காட்டுத் தீயில் சிக்கி   55 போ் உயிாிழந்துள்ளனா்.   தீயானது  நகர்ப் புற பகுதிகளுக்கு பரவியதனால் வீடுகள், கட்டிடங்கள், வணிக வளாகங்கள் தீ பற்றி எரிந்துள்ளன.

வானுயர எழுந்த கரும் புகையால் மவுய் நகரமே புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதையடுத்து அந்த நகரத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே றினா்.  பலர் காட்டுத்தீயில் சிக்கி  உயிாிழந்துள்ளனா். . இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களுடன் இணைந்து அமெரிக்க விமான படை மற்றும் கடற்படை வீரர்களும் தீயை அணைக்க  போராடிக் கொண்டுள்ளனா்.

தீயில் இருந்து தப்பிக்க பலர் பசுபிக் பெருங்கடலில் தீக்காயங்களுடன் குதித்துள்ளனர். இதில் சிலர்  உயிாிழந்துள்ள நிலையில்  இந்த காட்டுத்தீயில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 53 ஆக உயர்ந்துள்ளது.அதிகமானோா்  தீக்காயம் அடைந்து  மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகின்றனர். மவுய் தீவில் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளதுடக் கைத்தொலைகேசி சேவையும் பாதிக்கப் பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

270-க்கும் மேற்பட்ட வீடுகள், கட்டிடங்கள் தீயில் எரிந்து சேதமாகியுள்ளன.  ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வீடுகளை இழந்துள்ளனர். காட்டுத்தீயால் இந்த தீவுக்கு  சென்ற  சுற்றுலா பயணிகள்   நகரை விட்டு வெளியேறி விமான நிலையத்திற்கு சென்றனர். ஆனால் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் அவர்கள் விமான நிலையத்தில் குடும்பத்துடன் தவித்து வருகின்றனர். அங்கு அவசர நிலை பிரகனப்படுத்தப்பட்டு இருக்கிறது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More