619
மிஹிந்தலை தம்மன்னாவ வாவியில் மீன்பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்கள் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. இன்று (11) மாலை ஏழு பேர் கொண்ட குழுவொன்று தம்மன்னாவ வாவியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போதே இந்த அனா்த்தம் ஏற்பட்டுள்ளது.
44 மற்றும் 46 வயதுக்குட்பட்ட மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர்களின் சடலங்கள் தம்மன்னாவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love