முல்லைத்தீவு நீதிமன்றில் இருந்து பெறப்பட்ட நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் முல்லைத்தீவு குருந்தூா் ஆலயத்தில் பொங்கல் நடத்துவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட குழுவினர் சென்றதனை சட்டவிரோதமானது என அதன் பங்களிப்பாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால், இரு தரப்பினருக்கும் இடையே சூடான வார்த்தைகள் பரிமாறிக்கொள்ளப்பட்டது
இதனையடுத்து ஸ்தலத்திற்கு சென்ற விகாரை பீடாதிபதி கல்கமுவ சாந்தபோதி தேரர் நீதிமன்ற உத்தரவு காரணமாக பொங்கலை நடத்த சந்தர்ப்பம் வழங்கப்படதாகவும் இனிவரும் காலங்களில் இவ்வாறான செயல்களை செய்ய வேண்டாம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட குழுவினருக்கு அறிவித்துள்ளார்.
தொடா்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற முல்லைத்தீவு காவல்துறையினா் நிலைமையை கட்டுப்படுத்தியதுடன் பொங்கலுக்கு பொருத்தமான இடத்தை தயார் செய்வதற்காக தொல்லியல் துறை அதிகாரிகளை வரவழைத்துள்ளனா். .