Home இலங்கைநெல்லியடியில் விபத்து – இருவர் உயிரிழப்பு

நெல்லியடியில் விபத்து – இருவர் உயிரிழப்பு

by admin

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில், இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.   கரவெட்டி வதிரியைச் சேர்ந்த விஜயகாந்த் நிசாந்தன் (வயது -29) மற்றும் செல்வநாயகம் வின்சன் மனோஜ்குமார் (வயது-31) ஆகிய இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.
 நெல்லியடி கலிகை சந்தி பகுதியில் உள்ள வீதி வளைவொன்றில் மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
 விபத்து குறித்து நெல்லியடி  காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More