342
இரண்டு நாட்கள் உத்தியோகபூர் பயணம் மேற்கொண்டு சிங்கப்பூர் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலீமா யெகோப் (Halimah Yacob) ஐ சந்தித்தித்துள்ளார்.
ஜனாதிபதி இருநாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இன்று அதிகாலை (21.08.23) சிங்கப்பூர் பயணித்தார்.
இந்த பயணத்தில் தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன, பொருளாதார அலுவல்கள் தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
Spread the love