419
சாப்பிட்ட பின்னர் படுக்கைக்கு சென்ற இளைஞன் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியை சேர்ந்த மிதுன்ராஜ் (வயது 31) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். தனது வீட்டில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு சாப்பிட்ட பின்னர் அசாதாரண நிலையில் படுக்கைக்கு சென்ற சில நிமிடங்களில் கட்டில் அசைவின்றி காணப்பட்டமையால் , வீட்டார் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் , அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டுள்ளனர். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Spread the love