Home இலங்கைநல்லூர் ஆலய சூழலில் விசேட கண்காணிப்பு -பொது மக்களின் ஒத்துழைப்பையும் கோரியுள்ள காவல்துறை

நல்லூர் ஆலய சூழலில் விசேட கண்காணிப்பு -பொது மக்களின் ஒத்துழைப்பையும் கோரியுள்ள காவல்துறை

by admin
வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தனின் வருடாந்த உற்சவம் நேற்றைய தினம் திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்களுக்கு திருவிழா நடைபெறவுள்ளது.   அந்த காலத்தில் நல்லூர் ஆலய வளாகத்தில் காவல்துறையினர் மற்றும் யாழ்ப்பாண மாநகரசபையினரால் விசேட நடைமுறைகள் வீதி ஒழுங்குகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன எனவே அந்த செயற்பாட்டிற்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.

குற்ற செயல்களை கட்டுப்படுத்துவதற்காக யாழ் மாவட்ட பிரதி  காவல்துறைமா அதிபர் மஞ்சுள செனரத் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், நல்லூர் ஆலய சூழலில் பொலிசார் சிவில் உடையிலும், சீருடையிலும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள் .எனினும் பொதுமக்கள் தங்களுடைய உடமைகளை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்கள் வீடுகளை  நன்றாக பூட்டி ங்களுடைய  வீடுகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தி ஆலயத்திற்கு வந்து செல்ல வேண்டும் என தெரிவித்தார்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More