Home உலகம்   வாக்னர் குழு தலைவர் உள்ளிட்ட 10 பேர் பலி என ரஷ்யா அறிவித்துள்ளது!

  வாக்னர் குழு தலைவர் உள்ளிட்ட 10 பேர் பலி என ரஷ்யா அறிவித்துள்ளது!

by admin

ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கும் ரஷ்யாவுக்கும் சவால் விடுத்த  வாக்னர் குழு தலைவர் உள்ளிட்ட 10 பேர் பலி என ரஷ்யா அறிவித்துள்ளது

ரஷ்யாவின் டிவெர் மாகாணத்தில் நடந்த விமான விபத்தில் 10 பேர் பலியானார்கள் என்றும், அதில் வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசினும் ஒருவர் என அந்நாட்டு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

விமான பயணிகள் பட்டியலில் பிரிகோசின் பெயர் உள்ளதாகவும், உயிரிழந்தவர்களில் பிரிகோசின் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என தகவல்கள் வெளியாகின.

ரஷ்யாவில் வாக்னர் எனும் தனியார் இராணுவ அமைப்பு ரஷ்ய ஜனாதிபதிக்கு எதிரான கலகத்தை கடந்த மாதம் தொடங்கியது.

இது பெரும் புரட்சியாக வெடிக்கலாம் என உலகமே எதிர்பார்த்திருந்த நிலையில், ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இந்தக் கிளர்ச்சியை சாமர்த்தியமாக அடக்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து அந்த அமைப்பின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் ரஷ்யாவை விட்டு பெலாரஸ் நாட்டில் தஞ்சமடைந்திருந்தார்.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More