Home இலங்கைபண்ணை நாக பூசணி அம்மனுக்கு கொட்டகை அமைக்க முயற்சி – காவல் இருந்த காவல்துறையினா்

பண்ணை நாக பூசணி அம்மனுக்கு கொட்டகை அமைக்க முயற்சி – காவல் இருந்த காவல்துறையினா்

by admin
யாழ்ப்பாணம் பண்ணை சுற்று வட்டம் பகுதியில் வைக்கப்பட்டுள்ள நாக பூசணி அம்மனுக்கு , கொட்டகை அமைக்க முற்பட்டவர்களை  காவல்துறையினா்   தடுத்து நிறுத்தியுள்ளனர்.  அம்மன் சிலைக்கு கொட்டகை அமைக்கும் முயற்சியில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு சிலர் ஈடுபட்டு இருந்தனர். அவ்வேளை சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த பொலிஸார் அதனை அவதானித்து , யாழ் காவல்நிலைய பொறுப்பதிகாரிக்கு அறிவித்தனர்.
அதனை அடுத்து அங்கு வந்த பொறுப்பதிகாரி , சிலை விவகாரம் ஏற்கனவே நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டது. அதனால் இப்பகுதியில் கொட்டகை அமைக்க வேண்டும் ஆயின் , உரிய அனுமதிகளை பெற்று , அமையுங்கள். அதனை விடுத்து அனுமதியின்றி கொட்டகை அமைத்து , தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்க வேண்டாம் என கூறி , கொட்டகை அமைக்க முற்பட்டவர்களை அங்கிருந்து  காவல்துறையினா்   அப்புறப்படுத்தினர்.
அதேவேளை நேற்றைய தினம் இரவு முழுவதும் இரு காவல்துறையினா்  அம்மன் சிலைக்கு காவலுக்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More