912
பழைய மாணவர் ஒன்று கூடலில் நடனமாடிக்கொண்டிருந்த கனடாவை சேர்ந்தவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் , மல்லாகம் பகுதியை சொந்த இடமாக கொண்டவரும் , தற்போது புலம்பெயர்ந்து கனடாவில் வசித்து வருபவருமான 61 வயதுடைய நாகராஜா சசிதரன்என்பவரே உயிரிழந்துள்ளார்.
தெல்லிப்பழை மகாஜன கல்லூரி பழைய மாணவர் ஒன்று கூடல் கடந்த சனிக்கிழமை தெல்லிப்பழை பகுதியில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் இடம்பெற்றது.
அதன் போது பாடல் ஒன்றுக்கு நடனமாடிக்கொண்டு இருந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்,
Spread the love