385
செல்வ சந்நிதி ஆலய தேர்த்திருவிழாவில் கலந்து கொண்ட , பக்தர்களின் 25 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளது. ஆலய தேர் திருவிழா நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது. அதன் போது நாட்டின் பல பாகங்களில் இருந்தும் , புலம்பெயர் நாடுகளில் இருந்தும் பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர். அவ்வேளையில் சன கூட்டத்தை பயன்படுத்தி திருடர்கள் ஆலயத்திற்கு வருகை தந்திருந்தோரின் நகைகளை திருடி உள்ளனர்.
நகை திருட்டுக்கள் தொடர்பில் வல்வெட்டித்துறை காவல்துறையினருக்கு 11 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. முறைப்பாட்டின் பிரகாரம் சுமார் 25 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளன என காவல்துறையினர் தெரிவித்தனர்.
Spread the love