முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப்பணியினை எதிர்வரும் 05 ஆம் திகதி ஆரம்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நீ இந்த வழக்கு நேற்று(31) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த தவணை வழக்கு விசாரணையின் போது நிதி கையாளுகை தொடர்பில் நேற்றையதினம் (31) நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டமைக்கு அமைவாக அனைத்து தரப்பினரும் திமன்றில் முன்னிலையாகியிருந்தனா்
அத்துடன் யாழ்.சட்ட வைத்திய அதிகாரி எஸ்.பிரணவன், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணிகளான வி.கே.நிரஞ்சன், ரனித்தா ஞானராஜா மற்றும் காவல்துறையினா் உள்ளிட்ட தரப்பினரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த நிலையிலேயே அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்புடன் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் 29 ஆம் திகதி தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினை மேற்கொள்வதற்காக கனரக இயந்திரம் கொண்டு நிலத்தை தோண்டிய போது முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் குறித்த மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது