589
ஆலயத்தில் பூஜை முடிந்த்துக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த பூசகரை வழிமறித்து வாள் முனையில் கொள்ளை கும்பல் ஒன்று வழிப்பறியில் ஈடுபட்டுள்ளது. யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் பகுதியில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பூசகர் வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை அவரை வீதியில் வழிமறித்த மூவர் அடங்கிய கொள்ளை கும்பல் ஒன்று , அவரை வாள் முனையில் அச்சுறுத்தி அவரிடம் இருந்த ஒரு தொகை பணத்தை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் கொடிகாமம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love