320
சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கெதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்று(06) நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. குறித்த விவாதம் இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளது.
இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கவுள்ளதாக கட்சியின் பொது செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
Spread the love