415
யாழ்ப்பாணம் – பலாலி கிழக்கு பகுதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை குளவி கொட்டுக்கு இலக்காகி ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஐவரும் சிகிச்சைக்காக அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் தற்போது கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவி வருவதனால் மரங்களில் இருந்த குளவிக்கூடு கலைந்து குளவிகள் கூண்டில் இருந்து வெளியேறி தாக்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
Spread the love