Home இலங்கைசிங்கப்பூரில்     மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டில் இலங்கையர் கைது

சிங்கப்பூரில்     மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டில் இலங்கையர் கைது

by admin

 

சிங்கப்பூரில்   அவரது  மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 30 வயதான  இலங்கையரான ஈஷான் தாரக கூட்டகே  என்பவரே அவரது மனைவியான  தியவின்னகே செவ்வந்தி மதுகா குமாரி என்பவரை கொலை செய்ததாக   குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 9 ஆம்  திகதி   , 88 ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டில் அமைந்துள்ள    ஹோட்டல் ஒன்றில் இந்தக் கொலை நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள குறித்த இலங்கையா்  ஒரு வாரம் காவலில் வைக்கப்பட்டு, பின்னர் மீண்டும் செப்டம்பர் 18ம் திகதி நீதிமன்றத்திற்கு கொண்டு  செல்லப்படுவாா் எனவும்  அவா் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனையை விதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது

இந்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் கத்தி ஒன்று ஹோட்டல் அறையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More