19 கோடி ரூபாய் பெறுமதியான 02 கிலோ 500 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருள் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் நேற்று செவ்வாய்க்கிழமை (12) கட்டுநாயக்க விமான சரக்கு முனைய வளாகத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த போதைப்பொருள் ஒரு கரப்பந்தாட்ட வலையின் மேல் மற்றும் கீழ் விளிம்புகளில் கூடுதல் பிளாஸ்டிக் குழாய் செருகப்பட்டு மறைக்கபட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது
பிரேசிலில் இருந்து மருதானை பகுதியில் உள்ள முகவரிக்கு இந்த போதைப்பொருள் அடங்கிய பொதி அனுப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து பொதியின் உரிமையாளர்கள் இருவரை கட்டுநாயக்க விமான சரக்கு முனையத்திற்கு வரவழைத்து கைது செய்த சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் , இருவரையும் மேலதிக விசாரணைகளுக்காக போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.