Home இலங்கை நல்லூர் தீர்த்தத்திருவிழா

நல்லூர் தீர்த்தத்திருவிழா

by admin

 

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ தீர்த்தத்திருவிழா இன்றைய தினம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
காலை 6 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வேல் பெருமான், வள்ளி, தெய்வானை, பிள்ளையார் , மற்றும் சண்டேஸ்வரர் ஆகியோர் காலை 07 மணிக்கு ஆலய தீர்த்த கேணிக்கு எழுந்தருளியதை தொடர்ந்து தீர்த்த உற்சவம் இடம்பெற்றது.

தீர்த்த திருவிழாவுக்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் , வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.   ஆயிரக்கணக்கான அடியவர்கள் அங்க பிரதட்சணம் செய்தும் , நூறுக்கணக்கானவர்கள் காவடிகள் எடுத்தும் கற்பூர சட்டிகள் ஏந்தியும் முருக பெருமானை வழிபட்டனர் .

இதேவேளை இன்றைய தினம் மாலை 6 மணிக்கு கொடியிறக்கம் நடைபெறவுள்ளது. அதனுடன் ஆலய மகோற்சவ திருவிழாக்கள் நிறைவடையவுள்ளது. நாளைய தினம் மாலை 5 மணிக்கு முருக பெருமானின் திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது என்பது குறிபிடத்தக்கது

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More