439
யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி சந்தியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுபான சாலையை அகற்றுமாறு , உடுப்பிட்டி சந்தியில் இன்றைய தினம் வியாழக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மதுபான சாலை அமைந்துள்ள குறித்த பகுதியில் பாடசாலைகள், ஆலயம் என்பன இருப்பதனால் இந்த மதுபானசாலை அகற்றப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அத்தோடு சில தினங்களுக்குள் மதுபான சாலை அகற்றப்படாவிட்டால் தொடர் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தெரிவித்தனர். போராட்டம் தொடர்பான மகஜர் வடக்கு மாகாண ஆளுநர், யாழ்.மாவட்ட செயலர் உள்ளிட்டவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Spread the love