பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான 14 ஆவது மினி ஒலிம்பிக் போட்டியில் யாழ் பல்கலைக்கழக பெண்கள் பளுதூக்கு அணி 5 தங்கம் , 2 வெள்ளி, 1வெண்கல பதக்கம் என 08 பதக்கங்களை பெற்று இவ்வருட சம்பியன் பட்டத்தை பெற்றுக்கொண்டது. இவ்வருடமே முதன் முதலாக பெண்கள் பளுதுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை ஆணொருவரும் தங்க பதக்கத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
பதக்கங்களை பெற்றவர்கள் விபரங்கள் வருமாறு,
- N.மிதுசா 49 kg எடை பிரிவில் 90 kg எடையினை தூக்கி தங்க பதக்கதினை பெற்றார்
-
K. சனுஜா 49 kg எடை பிரிவில் 71 kg எடையினை தூக்கி வெள்ளி பதக்கதினை பெற்றார்
-
H. A. I. N.ரத்ன நாயக்க 55kg எடை பிரிவில் 100kg எடையினை தூக்கி தங்க பதக்கதினை பெற்றார்
-
J. பஜினா 64kg எடை பிரிவில் 120 kg எடையினை தூக்கி வெள்ளி பதக்கதினை பெற்றார்
-
R.தசாந்தினி 76kg எடை பிரிவில் 110 kg எடையினை தூக்கி தங்க பதக்கதினை பெற்றார்
-
R.தக்சாயினி 81kg எடை பிரிவில் 100 kg எடையினை தூக்கி தங்க பதக்கதினை பெற்றார்
7.D. M. D. M.தனபால 87kg எடை பிரிவில் 79kg எடையினை தூக்கி வெண்கல பதக்கதினை பெற்றார்
8.S.ஜீவமலர் +87kg எடை பிரிவில் 80kg எடையினை தூக்கி தங்க பதக்கதினை பெற்றார்.
அதேவேளை ஆண்கள் பளுதுக்கள் பிரிவில் T. நர்மதன் 89 kg எடை பிரிவில் 195kg எடையினை தூக்கி தங்க பதக்கத்தினை பெற்று கொண்டார்