346
யாழ்ப்பாணத்தில் போதைக்கு அடிமையான இளையோரில் 10 பேர் , போதைப் பாவனையில் இருந்து மீள்வதற்காக தாமாக முன் வந்த நிலையில் அவர்களை சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். யாழ்.மாவட்ட செயலகத்தில் போதைப்பொருள் பாவனை தொடர்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் , அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் ,
யாழ்ப்பாணத்தில் இளையோர் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. போதைப்பொருள் பாவனையால் உயிரிழப்புக்களும் நிகழ்ந்துள் ளன. இந்நிலையில் கடந்த சில தினங்களில் போதைப்பொருளுக்கு அடிமையான 10 இளையோர் போதைப்பொருள் பாவனையில் இருந்து மீள வேண்டும் என தாமாக முன் வந்துள்ளனர்.
அவர்களை தேசிய அபாயகர ஒளதடங்கள் அதிகார சபையின் நிட்டம்புவ பகுதியில் உள்ள சிகிச்சை நிலையத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
போதைக்கு அடிமையான இளையோர், போதை பாவனையில் இருந்து மீள தாமாக முன் வந்தால் அவர்களை சிகிச்சைகளின் மூலம் அதில் இருந்து மீட்க முடியும். அவ்வாறு போதை பாவனையில் இருந்து மீள்வதற்கு சிகிச்சைக்கு வருவோர் தொடர்பிலான விபரங்கள் எதனையும் வெளிப்படுத்த மாட்டோம். அவர்களின் தனிப்பட்ட தகவல்கள் இரகசியம் பேணப்படும் எனவே பயமின்றி சிகிச்சைக்கு வரலாம் என்றார்.
Spread the love