IMHO Canada (INGO) இன் நிதியுதவியுடன் கிளிநொச்சி உளநல சங்கத்தின் ஏற்பாட்டில் (KMHS, NGO) யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் புதிதாக திருமணமாகவுள்ள தம்பதிகளுக்கு திருமணத்திற்கு முன்னரான திருமணத்திற்கு தயார்படுத்துவதற்கான மூன்று நாள் உளவளத்துணை பயிற்சி பயிலமர்வு நடாத்தப்பட்டது.
யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும் அரச துறையில் பணியாற்றும் துறைசார் நிபுணர் குழு வளவாளர்களாக பங்கேற்ற இப் பயிலமர்வு அண்மையில் நடாத்தப்பட்டது.
இதில் 30 புதிதாக திருமணமாகவுள்ள தம்பதிகள் கலந்து கொண்டு இப்பயிற்சியைப் பெற்றுக் கொண்டனர். எதிர்காலத்தில் பால்நிலைசார் வன்முறையற்ற சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் நோக்குடனும், ஆரோக்கியமான பால்நிலை புரிதலுடன் கூடிய திருமண வாழ்வை மேம்படுத்தும் நோக்குடனும் இவ் உளவளத்துணை பயிற்சி பயிலமர்வு KMHS (NGO) இனால் ஒழுங்கமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.