Home இலங்கைபுகையிரதத்தில் ஏற முற்பட்டவர் தவறி விழுந்து உயிரிழப்பு

புகையிரதத்தில் ஏற முற்பட்டவர் தவறி விழுந்து உயிரிழப்பு

by admin

யாழ்ப்பாணத்தில் புகையிரத்தில் ஏற முற்பட்ட போது தவறி தண்டவாளத்தில் விழுந்து காயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி சங்கத்தானையைச் சேர்ந்த மாணிக்கம் விஜயரட்ணம் (வயது 69) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கடந்த 8 ஆம் திகதி இரவு தச்சன்தோப்பு புகையிரத நிலையத்தில் இருந்து புகையிரதத்தில் ஏற முற்பட்ட போது தவறி தண்டவாளத்தில் விழுந்துள்ளார். உடனடியாக, மீட்கப்பட்டு சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More