Home இலங்கைஹர்த்தாலினால் யாழ் நகரம் முற்றாக முடங்கியது.

ஹர்த்தாலினால் யாழ் நகரம் முற்றாக முடங்கியது.

by admin
தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் முன்னெடுக்கப்படும் ஹர்த்தால் போராட்டத்திற்கு யாழ்ப்பாண நகரில் வர்த்தக  நிலையங்கள் மூடப்பட்டு பூரண ஆதரவை வழங்கியுள்ளன.  இதனால் யாழ்ப்பாண நகரம் முற்றாக முடங்கியுள்ளது.
தனியார் பேருந்து சேவை அனைத்தும் முடங்கியுள்ளன. இலங்கை போக்குவரத்து சபை பேருந்து அங்காங்கே சேவையில் ஈடுபடுவதை அவதானிக்க முடிந்தது. தவணைப் பரீட்சைகள் காரணமாக
பாடசாலைகள் இயங்கியதையும் அவதானிக்க முடிந்தது.அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த பொது போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து சேவைகளும் ஸ்தம்பிதம் அடைந்தன.முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ப. சரவணராஜா, அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு பதவியிலிருந்து  விலகி  நாட்டை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டதை எதிர்த்து வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்க அழைப்பு விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More